போர் பதற்றம் - ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வெளியுறவுத்துறை

 

போர் பதற்றம் காரணமாக ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் சூழலால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று
 வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கடந்த ஒன்றாம் தேதி ஈரான் துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானின் ராணுவத் தளபதிகள் இருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியர்கள் யாரும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஈரான், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகிறதா ஈரான்… ஜோ பைடன் கூறியதென்ன?!


அதிமுக்கியத்துவம் வாய்ந்த காரணங்கள் இன்றி எங்கும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்புடன் இருக்கவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

புதியது பழையவை