மாலே: மாலத்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ள நிலையில், அதை மீட்டெடுக்க அந்நாட்டுச் சுற்றுலாத் துறை முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா மாலத்தீவுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே நல்லுறவு இல்லை. பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சர்ச்சை காரணமாக மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணித்து வருகிறார்கள்.இதற்கிடையே இழந்த இந்தியச் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் மாலத்தீவுக்கு ஈர்க்கும் வகையில், அங்குள்ள உள்ள ஒரு முக்கிய சுற்றுலா அமைப்பு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரோட்ஷோ நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள்: மாலத்தீவிற்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், MATATO எனப்படும் மாலதீவுகள் சுற்றுலா முகவர்கள் மற்றும் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் முதலில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து இந்தியத் தூதர் முனு மஹாவருடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து ரோட் ஷோ நடத்தப்படும் என்று அறவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு எடுக்கப்பட்ட அழகிய போட்டோக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதற்கு மாலத்தீவு இணை அமைச்சர்கள் மிக மோசமான கருத்துகளைக் கூறவே இரு நாட்டு உறவு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு பல பிரபலங்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் மாலத்தீவு செல்ல புக் செய்த ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட்களை கேன்சல் செய்தனர். மேலும், மாலத்தீவைப் புறக்கணிப்போம் என்று வெளிப்படையாக அறிவித்தனர்
இந்தியர்கள் எண்ணிக்கை: இதனால் மாலத்தீவுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. முதலில் மாலத்தீவுக்குச் செல்லும் டாப் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த நிலையில், அது இப்போது 6ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மாலதீவுகளின் சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வரை மாலத்தீவுக்கு மொத்தமாக 6,63,269 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.
அதில் அதிகபட்சமாகச் சீனாவில் இருந்த 71,995 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். தொடர்ந்து இங்கிலாந்து (66,999), ரஷ்யா (66,803), இத்தாலி (61,379), ஜெர்மனி (52,256) நாடுகள் இருக்கும் நிலையில், 37,417 சுற்றுலா பணிகளுடன் இந்தியா அடுத்த இடத்தில் இருக்கிறது.
அதில் அதிகபட்சமாகச் சீனாவில் இருந்த 71,995 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். தொடர்ந்து இங்கிலாந்து (66,999), ரஷ்யா (66,803), இத்தாலி (61,379), ஜெர்மனி (52,256) நாடுகள் இருக்கும் நிலையில், 37,417 சுற்றுலா பணிகளுடன் இந்தியா அடுத்த இடத்தில் இருக்கிறது.
முக்கிய முடிவு: மாலேயில் உள்ள இந்தியத் தூதருடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு MATATO அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுற்றுலாவை மேம்படுத்த மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், "முக்கிய இந்திய நகரங்களில் ரோட் ஷோ நடத்த உள்ளோம். ஊடகங்கள் இன்புளுயன்சர்கள் எளிதாக மாலத்தீவு வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்